பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thulikal

துளிகள்

துளிகள்
6–வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

* இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் (ஐ.எஸ்.எல்.) கொச்சியில் நேற்றிரவு அரங்கேறிய கேரளா பிளாஸ்டர்ஸ் – ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் இடையிலான லீக் ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இன்றைய ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) –பெங்களூரு அணிகள் (இரவு 7.30 மணி) மோதுகின்றன.

*6–வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நேற்றிரவு நடந்த 94–வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 45–27 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை தோற்கடித்து 12–வது வெற்றியை சுவைத்தது. இதன் மூலம் ‘ஏ’ பிரிவில் 68 புள்ளிகளுடன் குஜராத் அணி அடுத்த சுற்று வாய்ப்பை (பிளேஆப் சுற்று) உறுதி செய்தது. இந்த பிரிவில் ஏற்கனவே மும்பை அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 34–29 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை சாய்த்தது. இன்றைய ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ்–பெங்கால் வாரியர்ஸ் (இரவு 8 மணி), தபாங் டெல்லி–பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
*நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணியை நாங்கள் வீழ்த்தினாலும் இந்திய ரசிகர்கள் எங்கள் மீது அதிக கோபமாக இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.
2. துளிகள்
முறைகேடு எதிரொலியாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை அந்த நாட்டு விளையாட்டுத்துறை இடை நீக்கம் செய்துள்ளது.
3. துளிகள்
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ஜூன் 14–ந் தேதி தொடங்குகிறது.
4. துளிகள்
இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்ட போது கலீல் அகமது வீசிய பந்து வலது கையில் தாக்கி காயம் அடைந்தார்.
5. துளிகள்
* இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் பெடரேஷன், எச்.சி.எல். கம்ப்யூட்டர் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டின் தரத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன்படி இந்திய ஸ்குவாஷ் வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன.