பிற விளையாட்டு

து ளி க ள் + "||" + Thulikal

து ளி க ள்

து ளி க ள்
உலக கோப்பை ஆக்கி போட்டியின் போது, பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய புகாரில் சிக்கிய பாகிஸ்தான் அணியின் உதவி பயிற்சியாளர் டேனிஸ் கலீம் எச்சரிக்கையுடன் தப்பினார்.

* மாநில நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான (குரூப் 5) 50 மீட்டர் பிரஸ்ட் ஸ்டிரோக் பந்தயத்தில் நெல்லை வீரர் நிதேஷ் 43.12 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். பெண்களுக்கான (குரூப் 5) 50 மீட்டர் பிரஸ்ட் ஸ்டிரோக் பந்தயத்தில் சென்னை வீராங்கனை பிரமிதி 48.76 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

* இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில் 64-வது தேசிய தேக்வாண்டோ போட்டி இம்பாலில் நடந்தது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் சென்னை பள்ளி மாணவர் ரோஷன்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

* உலக கோப்பை ஆக்கி போட்டியின் போது, பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய புகாரில் சிக்கிய பாகிஸ்தான் அணியின் உதவி பயிற்சியாளர் டேனிஸ் கலீம் எச்சரிக்கையுடன் தப்பினார். இதே போல் மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் அணியின் துணை கேப்டன் அமாட் பட் மீதான நடவடிக்கையையும் சர்வதேச ஆக்கி சம்மேளனம் தளர்த்தியுள்ளது.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)- அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் இடையிலான ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது.

* புரோ கபடி லீக் போட்டியில் நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்த லீக் ஆட்டங்களில் யு மும்பா 31-20 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சையும், தெலுங்கு டைட்டன்ஸ் 36-26 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சையும் தோற்கடித்தது. இன்றைய ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்- ஜெய்ப்பூர் (இரவு 8 மணி), தெலுங்கு டைட்டன்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
* டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடும் வீரர்கள் சீருடையில் தங்களது பெயர் மற்றும் எண்களை பொறித்துக் கொள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து இந்த சலுகையை வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
2. துளிகள்
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
3. துளிகள்
ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா தங்கம் வென்றார்.
4. துளிகள்
முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையும், 15 வயதிலேயே ‘கிராண்ட்ஸ்லாம்’ மகுடம் சூடிய சாதனையாளருமான மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) தாய் ஆகியுள்ளார்.
5. துளிகள்
‘காபி வித் கரண்’ டி.வி. நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா பெண்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை கிளப்பின.

அதிகம் வாசிக்கப்பட்டவை