பிற விளையாட்டு

து ளி க ள் + "||" + Thulikal

து ளி க ள்

து ளி க ள்
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் பெங்களூரு எப்.சி.–மும்பை சிட்டி அணிகள் இடையிலான ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

*டாக்காவில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 195 ரன்களே எடுக்க முடிந்தது. மோர்தசா, முஸ்தாபிஜூர் ரகுமான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த இலக்கை வங்காளதேச அணி 35.1 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. 2–வது ஆட்டம் நாளை நடக்கிறது.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் நேற்றிரவு பெங்களூருவில் நடந்த பெங்களூரு எப்.சி.–மும்பை சிட்டி அணிகள் இடையிலான ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

* புரோ கபடி லீக் தொடரில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த 104–வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 24–37 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சிடம் வீழ்ந்தது. தலைவாஸ் அணி சந்தித்த 11–வது தோல்வி இதுவாகும். மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் 35–31 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தியது. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.

* பெண்களுக்கான பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. ஹோபர்ட் அணிக்காக ஆடும் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா 69 ரன்கள் (41 பந்து, 13 பவுண்டரி) விளாசினார். இந்த ஆட்டத்தில் ஹோபர்ட் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

*ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் காலின் கெஸ்ட் (வயது 81) நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். துக்கம் அனுசரிக்கும் வகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் அடிலெய்டு டெஸ்டின் 4–வது நாளான நேற்று கையில் கருப்பு அட்டை அணிந்து விளையாடினர்.