பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
* ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா காயம் அடைந்தார். அதன் பிறகு அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. காயம் குணமாகி உடல் தகுதியை எட்டி இருப்பதால் ஹர்திக் பாண்ட்யா மும்பையில் வருகிற 14-ந் தேதி தொடங்கும் மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் பரோடா அணிக்காக களம் இறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பரோடா அணியில் முன்னாள் ஆல்-ரவுண்டர் யூசுப் பதானும் இடம் பிடித்துள்ளார்.


* ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்கள் அபிஜித் குந்தே, லலித் பாபு, விதித் குஜராத்தி ஆகியோர் நேற்று முன்தினம் தண்ணீர் வாங்குவதற்காக வெளியே சென்ற போது உள்ளூர் ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளனர். இதனை விதித் குஜராத்தி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். போட்டி நடைபெறும் இடத்தில் அடிப்படை வசதிகள் சரியாக செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டி இருக்கிறார்.

* 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புனேயில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 54-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.புனே சிட்டி-எப்.சி. கோவா அணிகள் மோதுகின்றன.

* 6-வது புரோ கபடி லீக் தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் 106-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி-மும்பை (இரவு 8 மணி) அணியும், மற்றொரு லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-உ.பி.யோத்தா (இரவு 9 மணி) அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.