பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சாம்பியன் + "||" + PV Sindhu vs Nozomi Okuhara Final, BWF World Tour Finals 2018 Live Score: PV Sindhu Makes History, Claims Her Maiden BWF World Tour Finals

உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சாம்பியன்

உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சாம்பியன்
உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
குவாங்சோவ்,

உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவின் குவாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று  நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில்  தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானைச்சேர்ந்த உலகின் 7 ஆம் நிலை வீராங்கனையான நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார். 

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய வீராங்கனை பிவி சிந்து, 21-19, 21-17 என்ற கணக்கில் நஜோமி ஒகுஹராவை  வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.