பிற விளையாட்டு

பேட்மிண்டன் தரவரிசையில் சிந்து 3–வது இடத்துக்கு முன்னேற்றம் + "||" + Badminton rankings Sindhu improved to 3rd place

பேட்மிண்டன் தரவரிசையில் சிந்து 3–வது இடத்துக்கு முன்னேற்றம்

பேட்மிண்டன் தரவரிசையில் சிந்து 3–வது இடத்துக்கு முன்னேற்றம்
சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 3 இடங்கள் முன்னேறி 3–வது இடத்தை பிடித்துள்ளார்.

புதுடெல்லி, 

சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 3 இடங்கள் முன்னேறி 3–வது இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் டாப்–8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டனில் தங்கம் வென்றதன் மூலம் சிந்துவுக்கு இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 9–வது இடத்தில் நீடிக்கிறார். தாய் ஜூ யிங் (சீனதைபே) முதலிடத்திலும், நஜோமி ஒகுஹரா (ஜப்பான்) 2–வது இடத்திலும் உள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் 8–வது இடமும், சமீர் வர்மா 2 இடங்கள் உயர்ந்து 12–வது இடமும் வகிக்கிறார்கள்.