பிற விளையாட்டு

புரோ கபடி லீக்கில் பெங்கால் அணியிடம் தமிழ் தலைவாஸ் தோல்வி + "||" + The Bengal team in Pro Kabaddi League Tamil Leader fails

புரோ கபடி லீக்கில் பெங்கால் அணியிடம் தமிழ் தலைவாஸ் தோல்வி

புரோ கபடி லீக்கில் பெங்கால் அணியிடம் தமிழ் தலைவாஸ் தோல்வி
12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த 122-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

கொல்கத்தா, 

12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த 122-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதலில் முன்னிலை பெற்றது. சற்று நேரத்தில் தமிழ் தலைவாஸ் அணி முன்னிலை கண்டது. பின்னர் இரு அணிகளும் பல முறை சமநிலை வகித்தன. முதல் பாதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 20-17 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது. பின் பாதியிலும் பெங்கால் வாரியர்ஸ் அணி தனது முன்னிலையை தக்க வைத்து கொண்டது. முடிவில் பெங்கால் வாரியர்ஸ் அணி 27-24 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது. 17-வது ஆட்டத்தில் ஆடிய பெங்கால் வாரியர்ஸ் அணி 9 வெற்றி, 6 தோல்வி, 2 டையுடன் தனது பிரிவில் 3-வது இடத்துக்கு முன்னேறியது. 21-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி சந்தித்த 13-வது தோல்வி இதுவாகும். தமிழ் தலைவாஸ் அணி தனது பிரிவில் (பி) கடைசி இடத்தில் உள்ளது.

மற்றொரு லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி 35-20 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை தோற்கடித்தது.

இன்று (சனிக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் மும்பை-உ.பி.யோத்தா (இரவு 8 மணி) அணியும், பெங்கால் வாரியர்ஸ்-பாட்னா பைரட்ஸ் (இரவு 9 மணி) அணியும் மோதுகின்றன.