பிற விளையாட்டு

மாநில கைப்பந்து போட்டியில் எஸ்.டி.ஏ.டி., ஐ.ஓ.பி. அணிகள் சாம்பியன் + "||" + State volleyball match SDAD, IOB Teams champion

மாநில கைப்பந்து போட்டியில் எஸ்.டி.ஏ.டி., ஐ.ஓ.பி. அணிகள் சாம்பியன்

மாநில கைப்பந்து போட்டியில் எஸ்.டி.ஏ.டி., ஐ.ஓ.பி. அணிகள் சாம்பியன்
68–வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.

சென்னை, 

68–வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் 5–வது மற்றும் கடைசி நாளான நேற்று நடந்த பெண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. அணி 25–20, 20–25, 25–15, 25–22 என்ற செட் கணக்கில் ஐ.சி.எப். அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக நடந்த 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணி 25–23, 24–26, 25–18, 26–24 என்ற செட் கணக்கில் போராடி ஜி.கே.எம். அணியை சாய்த்தது.

ஆண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியன் வங்கி–ஐ.ஓ.பி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஐ.ஓ.பி. அணி 19–25, 25–23, 25–18, 25–20 என்ற செட் கணக்கில் இந்தியன் வங்கியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. முன்னதாக நடந்த 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். அணி 25–19, 28–26 என்ற நேர்செட்டில் செயின்ட் ஜோசப்ஸ் அணியை தோற்கடித்தது.