பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி, ஓமனுடன் நேற்று முன்தினம் மோதியது.

* மெல்போர்ன் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களையும், இந்திய ரசிகர்களை நோக்கியும் இனவெறியுடன் வசைபாடி கூச்சலிட்ட சில ஆஸ்திரேலிய ரசிகர்களை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் மைதானத்தை விட்டு வெளியேற்றியது. மேலும் சிலருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

* இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு பெரும்பாலான போட்டிகளில் விளையாடாத இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே, அடுத்த வாரம் தொடங்கும் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.

* ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி, ஓமனுடன் நட்புறவு ஆட்டத்தில் நேற்று முன்தினம் மோதியது. அபுதாபியில் நடந்த இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிரா ஆனது.

* பெண்கள் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் சிட்னியில் நேற்று நடந்த அடிலெய்டு ஸ்டிரைக்கர்சுக்கு எதிரான ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் அலிசா ஹீலே 17 பவுண்டரி, 2 சிக்சருடன் 112 ரன்கள் (69 பந்து) விளாசினார். இந்த ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து வெளியேற்றம் - இந்திய அணியின் பயிற்சியாளர் ராஜினாமா
ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து இந்திய அணி வெளியேறியது.
2. ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா-பக்ரைன் இன்று மோதல்
ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா-பக்ரைன் அணிகள் இன்று மோத உள்ளன.
3. ஆசிய கோப்பை கால்பந்து போட்டி: இந்திய அணியின் வெற்றி தொடருமா? - ஐக்கிய அரபு அமீரகத்துடன் இன்று மோதல்
ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதுகின்றன.
4. ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் சீன அணி வெற்றி
ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில், கிர்கிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சீன அணி வெற்றிபெற்றது.
5. ஆசிய கோப்பை கால்பந்து போட்டி: முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!!
ஆசியன் கோப்பை கால்பந்து தொடரின் முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.