பிற விளையாட்டு

புரோ கபடி: இறுதிப்போட்டியில் குஜராத் அணி + "||" + Pro Kabaddi: Gujarat team in final

புரோ கபடி: இறுதிப்போட்டியில் குஜராத் அணி

புரோ கபடி: இறுதிப்போட்டியில் குஜராத் அணி
6–வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு மும்பையில் நடந்த இறுதிப்போட்டிக்கான 2–வது தகுதி சுற்றில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி, உ.பி.யோத்தாவுடன் மோதியது.

மும்பை,

6–வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு மும்பையில் நடந்த இறுதிப்போட்டிக்கான 2–வது தகுதி சுற்றில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி, உ.பி.யோத்தாவுடன் மோதியது. இதில் அபாரமாக ஆடிய குஜராத் அணி முதல் பாதியில் 19–14 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. அந்த முன்னிலையை கடைசி வரை தக்க வைத்துக் கொண்ட குஜராத் அணி 38–31 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 2–வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக சச்சின் 10 புள்ளிகளும், பிரபஞ்சன் 5 புள்ளிகளும் எடுத்தனர்.

இதே மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் குஜராத் அணி, பெங்களூரு புல்சை சந்திக்கிறது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே முதலாவது தகுதி சுற்றில் சந்தித்ததும் அதில் பெங்களூரு வெற்றி கண்டதும் குறிப்பிடத்தக்கது.