பிற விளையாட்டு

கேலோ இந்தியா தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீரர், வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றனர் + "||" + Kalo India national sports competition the Tamil Nadu player won the gold medal

கேலோ இந்தியா தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீரர், வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றனர்

கேலோ இந்தியா தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீரர், வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றனர்
கேலோ இந்தியா தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீரர் மற்றும் வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றனர்.
புனே, 

கேலோ இந்தியா தேசிய இளையோர் விளையாட்டு போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 21 வயதுக்கு உட்பட்ட பிரிவின் நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை ஆன்ட்ரியா 6.15 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். ஆண்களுக்கான 21 வயதுக்கு உட்பட்ட பிரிவில் டிரிபிள் ஜம்ப் (மும்முறை தாண்டுதல்) பந்தயத்தில் தமிழக வீரர்கள் அரவிந்த் 15.45 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கமும், மணிராஜ் 15.33 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கமும் வென்றனர். பதக்கம் வென்ற 3 பேரும் சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளர் பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர்கள்.