பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
கோவா அணியின் முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரர் ராஜேஷ் கோட்ஜ் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

* கோவா அணியின் முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரர் ராஜேஷ் கோட்ஜ் (வயது 44) நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். உள்ளூரில் நடந்த கிரிக்கெட் போட்டியில் ஆடிக்கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

* ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பட்டி உப்டன் நேற்று நியமிக்கப்பட்டார்.

* ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்த சீசனில் முன்கூட்டியே தொடங்குவதால், மார்ச் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்து விளையாட திட்டமிட்டுள்ள ஜிம்பாப்வே அணியின் தொடர் (ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி) நடப்பது சந்தேகமாகியுள்ளது.

* 4-வது பிரிமீயர் பேட்மிண்டன் லீக்கில் நேற்று பெங்களூருவில் நடந்த இறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் தலைமையிலான பெங்களூரு ராப்டர்ஸ் அணி 4-3 என்ற கணக்கில் மும்பை ராக்கெட்சை தோற்கடித்து பட்டத்தை சொந்தமாக்கியது.