பிற விளையாட்டு

சாய்னா வெற்றி; சிந்து தோல்வி + "||" + Saina's win; Sindhu failed

சாய்னா வெற்றி; சிந்து தோல்வி

சாய்னா வெற்றி; சிந்து தோல்வி
இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது.

ஜகர்தா, 

இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதிஆட்டம் ஒன்றில் சாய்னா நேவால் (இந்தியா) 21–7, 21–18 என்ற நேர்செட்டில் போர்ன்பவி சோசுவாங்கை (தாய்லாந்து) விரட்டியடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து 11–21, 12–21 என்ற நேர்செட்டில் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினிடம் (ஸ்பெயின்) பணிந்தார். இதேபோல் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 18–21, 19–21 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் ஜோனதன் கிறிஸ்டியிடம் வீழ்ந்து நடையை கட்டினார்.