பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
ஆன்டிகுவாவில் நடந்து வரும் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 187 ரன்னில் சுருண்டது.

* பெண்களுக்கான சர்வதேச கிராண்ட்மாஸ்டர் ரவுண்ட் ராபின் செஸ் போட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 7-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக், கஜகஸ்தானின் நக்பயேவா குலிஸ்கானுடன் போராடி டிரா கண்டார். 7 சுற்று முடிவில் இந்தியாவின் திவ்யா, மிட்செல் கேத்தரினா, உக்ரைனின் பாபி ஒல்கா ஆகியோர் தலா 5 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

* ‘ உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை சேர்ப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரில் ஒருவருக்கு பதிலாக அஸ்வினை கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும் என்பது எனது கருத்து’ என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

* ‘இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் ஊழல் நடந்துள்ளது. வீரர்களிடையே சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் இல்லை. ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இலங்கை அணி, 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் முதல் சுற்றை தாண்டுவதே சந்தேகம்தான்’ என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா கூறியுள்ளார்.

* ஆன்டிகுவாவில் நடந்து வரும் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 187 ரன்னில் சுருண்டது. பேர்ஸ்டோ (52 ரன்), பென் ஸ்டோக்ஸ் (14 ரன்), மொயீன் அலி (60 ரன்), பென் போக்ஸ் (35 ரன்) தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெமார் ரோச் 4 விக்கெட்டுகளும், ஷனோன் கேப்ரியல் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்திருந்தது.

* கராச்சியில் நேற்று நடந்த பாகிஸ்தான் பெண்கள் அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 133 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணியால் 6 விக்கெட்டுக்கு 132 ரன்களே எடுக்க முடிந்தது. ஆட்டம் சமனில் முடிந்ததால் கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது.