பிற விளையாட்டு

விளையாட்டுத்துறைக்கு ரூ.214 கோடி கூடுதலாக ஒதுக்கீடு + "||" + More than Rs.214 crore allocated for sports sector

விளையாட்டுத்துறைக்கு ரூ.214 கோடி கூடுதலாக ஒதுக்கீடு

விளையாட்டுத்துறைக்கு ரூ.214 கோடி கூடுதலாக ஒதுக்கீடு
மத்திய இடைக்கால பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு ரூ.214 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு மொத்தத்தில் ரூ.214.20 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது 2018-2019-ல் விளையாட்டுத்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டு தொகை ரூ.2002.72 கோடியாக இருந்தது. அது 2019-2020-ம் ஆண்டுக்கு ரூ.2,216.92 கோடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இவற்றில் இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு (சாய்) ஒதுக்கப்படும் தொகை ரூ.395 கோடியில் இருந்து ரூ.450 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


இதே போல் தேசிய விளையாட்டு மேம்பாட்டுக்கான நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.70 கோடியாகவும், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.63 கோடியில் இருந்து ரூ.89 கோடியாகவும் உயர்த்தப்படுகிறது. அதே சமயம் தேசிய விளையாட்டு சங்கங்களுக்கு உதவுவதற்காக வழங்கப்படும் தொகை ரூ.245.13 கோடியில் இருந்து ரூ.245 கோடியாக சற்று குறைக்கப்பட்டுள்ளது.