பிற விளையாட்டு

சென்னை மாவட்ட கைப்பந்து போட்டி 6-ந் தேதி தொடக்கம் + "||" + Chennai District Volleyball tournament starts on 6th

சென்னை மாவட்ட கைப்பந்து போட்டி 6-ந் தேதி தொடக்கம்

சென்னை மாவட்ட கைப்பந்து போட்டி 6-ந் தேதி தொடக்கம்
சென்னை மாவட்ட கைப்பந்து போட்டி 6-ந் தேதி தொடங்க உள்ளன.
சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான சென்னை மாவட்ட கைப்பந்து போட்டி (இரு பாலருக்கும்) சென்னை நேரு ஸ்டேடியத்தில் வருகிற 6 மற்றும் 7-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர்-வீராங்கனைகள் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில கைப்பந்து போட்டிக்கான சென்னை மாவட்ட அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 1-1-1998-க்கு பிறகு பிறந்த சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மற்றும் படிக்கும் வீரர்-வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்க தகுதி படைத்தவர்கள். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட விளையாட்டு அதிகாரி பிரேம்குமார், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் தனியார் தண்ணீர் லாரிகள் 27-ந்தேதி முதல் வேலைநிறுத்தம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வருகிற 27-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் மேலும் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.
2. சென்னையில் சர்வதேச கைப்பந்து பயிற்சியாளர் பயிற்சி முகாம்
சென்னையில் சர்வதேச கைப்பந்து பயிற்சியாளர் பயிற்சி முகாம் தொடங்கியது.
3. சென்னை பாடியில் பயங்கரம் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதி 2 பேர் பலி மேலும் ஒரு பெண் படுகாயம்; தி.மு.க. பிரமுகர் கைது
சென்னை பாடி மேம்பாலத்துக்கு கீழே சர்வீஸ் சாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதி பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குடிபோதையில் காரை ஓட்டி வந்த தி.மு.க பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
4. சென்னை: மெட்ரோ ரெயில் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
சென்னையில் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது.
5. சென்னை மெட்ரோ ரெயில் பணியாளர்கள் 8 பேர் பணி நீக்கம் உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு
விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதால் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் பணியாளர்கள் கோயம்பேடு அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.