பிற விளையாட்டு

சென்னை செஸ்: திவ்யாவுக்கு இரட்டை வெற்றி + "||" + Chennai Chess: Divya win double

சென்னை செஸ்: திவ்யாவுக்கு இரட்டை வெற்றி

சென்னை செஸ்: திவ்யாவுக்கு இரட்டை வெற்றி
சென்னையில் நடந்த செஸ் போட்டியில் திவ்யாவுக்கு இரட்டை வெற்றி கிடைத்தது.
சென்னை,

பெண்களுக்கான சர்வதேச கிராண்ட்மாஸ்டர் ரவுண்ட் ராபின் செஸ் போட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் நேற்று நடந்த 8-வது சுற்றில் மங்கோலியாவின் உட்சாய்க்கையும், 9-வது சுற்றில் உக்ரைனின் பாபி ஒல்காவை 92-வது காய் நகர்த்தலிலும் வீழ்த்தினார். இன்னும் 2 சுற்று மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் திவ்யா 7 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறார். மற்றொரு இந்திய வீராங்கனை மிட்செல் கேத்தரினா, உக்ரைனின் ஒஸ்மாக் லுல்ஜா ஆகியோர் தலா 6.5 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.