துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 3 Feb 2019 10:25 PM GMT (Updated: 3 Feb 2019 10:25 PM GMT)

தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடந்தது.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த 68-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி 5-வது வெற்றி வெற்றியை பதிவு செய்தது. கொல்கத்தா அணியில் இரண்டு கோலையும் மானுவல் லான்ஜரோட் அடித்தார். இன்றைய ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்- எப்.சி.கோவா அணிகள் சந்திக்கின்றன.

* தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. பொறுப்பு கேப்டன் டேவிட் மில்லர் 65 ரன்கள் (29 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 181 ரன்களே எடுக்க முடிந்தது. பாபர் அசாம் 90 ரன்கள் குவித்தும் பலன் இல்லை. 7 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை சுவைத்த தென்ஆப்பிரிக்கா தொடரையும் 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது. கடைசி ஆட்டம் நாளை மறுதினம் நடக்கிறது.

* கராச்சியில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பெண்கள் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இதில் பாகிஸ்தான் நிர்ணயித்த 151 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 138 ரன்களே எடுத்தது. 100-வது சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஆடிய முதல் ஆசிய வீராங்கனை என்ற சிறப்பை பெற்ற பாகிஸ்தான் பவுலர் சனா மிர் 2 விக்கெட் வீழ்த்தினார். இருப்பினும் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.


Next Story