பிற விளையாட்டு

புரோ கைப்பந்து போட்டியில் சென்னை அணி தோல்வி + "||" + Chennai team defeat in Pro Volleyball match

புரோ கைப்பந்து போட்டியில் சென்னை அணி தோல்வி

புரோ கைப்பந்து போட்டியில் சென்னை அணி தோல்வி
புரோ கைப்பந்து போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது.
கொச்சி,

முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், யு மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.


இந்த நிலையில் கொச்சியில் நேற்று இரவு நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, கோழிக்கோடு ஹீரோசை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் அமர்க்களப்படுத்திய கோழிக்கோடு அணி 15-8, 15-8, 13-15, 15-11, 15-11 என்ற செட் கணக்கில் சென்னை ஸ்பார்ட்டன்சை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் கோழிக்கோடு அணிக்கு 2 புள்ளி கிடைத்தது. இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத்- ஆமதாபாத் அணிகள் மோதுகின்றன.