பிற விளையாட்டு

புரோ கைப்பந்து: கொச்சி அணி 2-வது வெற்றி + "||" + Pro volleyball: Kochi team's 2nd win

புரோ கைப்பந்து: கொச்சி அணி 2-வது வெற்றி

புரோ கைப்பந்து: கொச்சி அணி 2-வது வெற்றி
புரோ கைப்பந்து போட்டியில், கொச்சி அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது.
கொச்சி,

முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் கொச்சி புளு ஸ்பைக்கர்ஸ் அணி 10-15, 15-11, 11-15, 15-12, 15-12 என்ற செட் கணக்கில் ஆமதாபாத் டிபென்டர்சை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது. ஆமதாபாத் அணிக்கு இது 2-வது தோல்வியாகும். இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ்- ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் அணிகள் சந்திக்கின்றன. இன்றைய ஆட்டம் குறித்து சென்னை அணியின் மேலாளர் நடராஜன் கூறுகையில், ‘முதல் ஆட்டத்தில் தோற்றாலும் ஐதராபாத் பிளாக் ஹாக்சுக்கு எதிரான ஆட்டத்தில் வலுவான அணியாக மீண்டு வருவோம்’ என்றார்.