சென்னையில் தேசிய பாடி பில்டிங் போட்டி நடக்க உள்ளன.
சென்னை,
தேசிய சீனியர் பாடி பில்டிங் (உடற்கட்டு) போட்டி சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஜேப்பியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் அடுத்த மாதம் (மார்ச்) 29-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. ஆண்களுக்கு 10 பிரிவிலும், பெண்களுக்கு ஓபன் பிரிவிலும் பந்தயம் நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து 100 வீராங்கனைகள் உள்பட 600 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் ரூ.50 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த தகவலை இந்தியன் பாடி பில்டர்ஸ் பெடரேஷன் பொதுச்செயலாளர் சேத்தன் பதாரே, தமிழ்நாடு பாடி பில்டிங் சங்க பொதுச்செயலாளர் அரசு ஆகியோர் தெரிவித்தனர்.
கரூரில் நடந்த மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் கரூர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணிக்கு சுழற்கோப்பை மற்றும் பரிசுத்தொகையை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.