பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
6 அணிகள் இடையிலான முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் நடந்து வருகிறது.

* சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் சென்னையைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த்தை வெளியேற்றி அரைஇறுதிக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் சசிகுமார் முகுந்த் தன்னை எதிர்த்த பிரைடன் கிளெனை (இங்கிலாந்து) 6-2, 3-6, 7-6 (3) என்ற செட் கணக்கில் தோற்கடித்து அரைஇறுதியை உறுதி செய்தார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் யுவராஜ்சிங் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘கிரிக்கெட் அறிவு மிக்கவர் டோனி. விக்கெட் கீப்பராக இருப்பதால், ஆட்டத்தின் போக்கை நன்கு கணிக்கக்கூடியவர். இளம் வீரர்களுக்கும், தற்போதைய கேப்டன் விராட் கோலிக்கும் வழிகாட்டியாக இருக்கிறார். உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் டோனியின் பங்களிப்பு முக்கியமான ஒன்றாக இருக்கும். முக்கியமான முடிவுகளை எடுப்பதில் அவர் உறுதுணையாக இருப்பார்’ என்றார்.

* 6 அணிகள் இடையிலான முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் கொச்சி புளு ஸ்பைக்கர்ஸ் அணி 12-15, 15-11, 15-12, 15-10, 14-15 என்ற செட் கணக்கில் ஐதராபாத் பிளாக்ஹாக்சை போராடி வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை சுவைத்தது. இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் கொச்சி புளு ஸ்பைக்கர்ஸ்- கோழிக்கோடு ஹீரோஸ் அணிகள் சந்திக்கின்றன.

* பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் பிரபலமான பிளமிங்கோ கால்பந்து கிளப் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பயிற்சி மையத்தில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த இளம் வீரர்களும், பயிற்சி உதவியாளர்களும் தீ விபத்தில் சிக்கினர். இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.