பிற விளையாட்டு

துளிகள் + "||" + Sports news thuligal

துளிகள்

துளிகள்
* குழந்தை பெற்றுக்கொண்டு ஓய்வில் இருக்கும் இந்திய டென்னிஸ் வீராங்கனை 32 வயதான சானியா மிர்சா அவ்வப்போது பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் களம் திரும்ப திட்டமிட்டுள்ளதாக நேற்று தெரிவித்தார்.
* இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிதானமாக ஆடியது. உணவு இடைவேளையின் போது அந்த அணி 26 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்திருந்தது.


* இந்தியாவுக்கு வருகை வரும் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. மூன்று ஆட்டங்களும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் (பிப்ரவரி 22, 25, 28) நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஆல்-ரவுண்டர் ஹேமலதா நீக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு பிறகு விக்கெட் கீப்பர் கல்பனா அழைக்கப்பட்டுள்ளார்.

* 6 அணிகள் இடையிலான முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 8-வது லீக் ஆட்டத்தில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி 15-11, 15-9, 15-14, 15-13, 15-10 என்ற நேர் செட் கணக்கில் கொச்சி புளு ஸ்பைக்கர்சை சாய்த்து 3-வது வெற்றியை பதிவு செய்தது. முதல் 3 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த கொச்சி அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் கோழிக்கோடு ஹீரோஸ்- ஐதராபாத் பிளாக் ஹாக்ஸ் அணிகள் மோதுகின்றன.

* குழந்தை பெற்றுக்கொண்டு ஓய்வில் இருக்கும் இந்திய டென்னிஸ் வீராங்கனை 32 வயதான சானியா மிர்சா அவ்வப்போது பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் களம் திரும்ப திட்டமிட்டுள்ளதாக நேற்று தெரிவித்தார்.

* 4 அணிகள் பங்கேற்றுள்ள கோல்டு கோப்பைக்கான பெண்கள் கால்பந்து போட்டி புவனேசுவரத்தில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தியது. இந்திய வீராங்கனை அஞ்சு தமாங் 48-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.