பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
சென்னை ஓபன் சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்தது.
* சென்னை ஓபன் சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் கோரென்டின் மோடெட் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ ஹாரிசை வீழ்த்தி பட்டத்தை வென்றார். பட்டம் வென்ற மோடெட்டுக்கு ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் பரிசுத்தொகையும், 80 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன.

* ஹாமில்டனில் நேற்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது திடீரென ஒரு இந்திய ரசிகர் கையில் தேசிய கொடியுடன் மைதானத்திற்குள் ஓடி வந்தார். நேராக டோனியிடம் வந்த அவர் அவரது காலை தொட்டு வணங்கினார். அப்போது தேசிய கொடி தரையில் படுவதை கவனித்த டோனி சுதாரித்து கொண்டு அந்த கொடியை ரசிகரின் கையில் இருந்து பிடுங்கிக்கொண்டார். டோனியின் தேசப்பற்றை பாராட்டிய ரசிகர்கள், இந்த வீடியோ காட்சியை சமூக வலைதளத்தில் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் புனேயில் நேற்றிரவு நடந்த புனே சிட்டி- அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. நாளை மறுதினம் நடக்கும் அடுத்த லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதுகின்றன.

* இந்த சீசனுக்கான எம்.ஆர்.எப். சேலஞ்ச் கார்பந்தய போட்டியின் (பார்முலா 2000 வகை) 3-வது மற்றும் கடைசி சுற்று போட்டி சென்னையில் 2 நாள் நடந்தது. இதில் 5 ரேஸ்கள் இடம் பெற்றன. இவற்றில் 3-ல் வெற்றி பெற்று அசத்திய இங்கிலாந்து வீராங் கனை 20 வயதான ஜாமி சாத்விக் மொத்தம் 280 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றார். பெல்ஜியம் வீரர் மேக்ஸ் டெபோர்னி 243 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தார். 7-வது ஆண்டாக நடந்த இந்த போட்டியில் வீராங்கனை ஒருவர் கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் தனியார் தண்ணீர் லாரிகள் 27-ந்தேதி முதல் வேலைநிறுத்தம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வருகிற 27-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் மேலும் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.
2. சென்னையில் சர்வதேச கைப்பந்து பயிற்சியாளர் பயிற்சி முகாம்
சென்னையில் சர்வதேச கைப்பந்து பயிற்சியாளர் பயிற்சி முகாம் தொடங்கியது.
3. சென்னை பாடியில் பயங்கரம் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதி 2 பேர் பலி மேலும் ஒரு பெண் படுகாயம்; தி.மு.க. பிரமுகர் கைது
சென்னை பாடி மேம்பாலத்துக்கு கீழே சர்வீஸ் சாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதி பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குடிபோதையில் காரை ஓட்டி வந்த தி.மு.க பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
4. சென்னை: மெட்ரோ ரெயில் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
சென்னையில் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது.
5. சென்னை மெட்ரோ ரெயில் பணியாளர்கள் 8 பேர் பணி நீக்கம் உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு
விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதால் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் பணியாளர்கள் கோயம்பேடு அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.