பிற விளையாட்டு

துளிகள் + "||" + Dhulikal in sports news

துளிகள்

துளிகள்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வரும் 42 வயதான முன்னாள் வீரர் கிரேக் மேக்மிலன் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலக கோப்பை போட்டியுடன் தனது பதவியில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார்.

* சையத் முஸ்தாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி அணி வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். அதனை டெல்லி கிரிக்கெட் சங்க தேர்வு குழு தலைவரும், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான அமித் பண்டாரி மற்றும் நிர்வாகிகள் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மைதானத்துக்குள் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல் அமித் பண்டாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை ஆக்கி ஸ்டிக் மற்றும் சைக்கிள் செயினால் தாக்கினார்கள். அதனை தடுக்க முயன்றவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் யாரும் தடுக்க முடியவில்லை. பின்னர் அந்த கும்பல் தப்பி சென்று விட்டது. இந்த தாக்குதலில் அமித் பண்டாரிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவர் கிகிச்சைக்காக உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 23 வயதுக்கு உட்பட்ட டெல்லி அணி தேர்வில் தகுதி இழந்த வீரர் அனுஜ் என்பவரின் ஏற்பாட்டில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. தாக்குதலுக்கு காரணமாக வீரருக்கு ஆயுட்கால தடை விதிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

* நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வரும் 42 வயதான முன்னாள் வீரர் கிரேக் மேக்மிலன் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலக கோப்பை போட்டியுடன் தனது பதவியில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார்.

* ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணி கேப்டன் விராட்கோலி நேர்மறையாகவும், வெளிப்படையாகவும் பேசுவதால் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் அவரை அதிகம் விரும்புகிறார்கள். உலகின் சிறந்த வீரராக விராட்கோலி விளங்குகிறார். சேசிங் செய்கையில் அவரது ஆட்டம் நம்ப முடியாத வகையில் அபாரமாக இருக்கிறது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவன் சுமித் செய்தது தவறுதான். அதற்காக அவருக்கு அளிக்கப்பட்ட ஒரு ஆண்டு தடை தண்டனை கடுமையானது’ என்று தெரிவித்தார்.