பிற விளையாட்டு

தேசிய பேட்மிண்டன்: பி.வி.சிந்து இரட்டை வெற்றி + "||" + National Badminton: PV Sindhu's double win

தேசிய பேட்மிண்டன்: பி.வி.சிந்து இரட்டை வெற்றி

தேசிய பேட்மிண்டன்: பி.வி.சிந்து இரட்டை வெற்றி
83–வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது.

கவுகாத்தி, 

83–வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தை சேர்ந்த நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து நேற்று ஒரே நாளில் இரட்டை வெற்றியை ருசித்தார். முதல் சுற்றில் 21–11, 21–13 என்ற நேர் செட்டில் மால்விகா பன்சோட்டை தோற்கடித்து சிந்து கால்இறுதியில் 21–16, 21–7 என்ற நேர் செட்டில் ரியா முகர்ஜீயை வெளியேற்றி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

முன்னதாக முன்னணி வீராங்கனை சாய்னா நேவால், முதல் சுற்றுக்காக தனக்கு ஒதுக்கப்பட்ட ஆடுகளம் சீரற்ற வகையில் மோசமாக இருப்பதாக கூறி விளையாட மறுத்தார். பிறகு போட்டி அமைப்பாளர்கள் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து வேறு ஆடுகளத்தில் ஆட சம்மதித்தார்.