பிற விளையாட்டு

தேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா + "||" + National Badminton: Sindhu-Saina in the final

தேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா

தேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா
83–வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.

கவுகாத்தி, 

83–வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதியில் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து 21–10, 22–20 என்ற நேர் செட்டில் அசாமை சேர்ந்த அஷ்மிதா சாலிகாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். கால்இறுதியில் நேகா பன்டிட்டை 21–10, 21–10 என்ற நேர் செட்டில் பந்தாடிய சாய்னா நேவால் அரைஇறுதியில் 21–15, 21–14 என்ற நேர் செட்டில் வைஷ்ணவியை வென்றார். இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் சிந்து–சாய்னா பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் தகுதிநிலை வீரர் லக்‌ஷயா சென் 21–15, 21–16 என்ற நேர் செட்டில் முன்னாள் காமன்வெல்த் சாம்பியன் காஷ்யப்புக்கு அதிர்ச்சி அளித்தார். மற்றொரு அரைஇறுதியில் சவுரப் வர்மா 21–14, 21–17 என்ற செட் கணக்கில் கவ்‌ஷல் தர்மாமெரை தோற்கடித்து இறுதிசுற்றை எட்டினார்.


ஆசிரியரின் தேர்வுகள்...