பிற விளையாட்டு

இந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு + "||" + Indian Kabaddi Federation As co-secretary Seabullah selected

இந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு

இந்திய கபடி சம்மேளனத்தின் இணைச்செயலாளராக சபியுல்லா தேர்வு
இந்திய அமெச்சூர் கபடி சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் முன்னாள் நீதிபதி எஸ்.பி.கர்க் மேற்பார்வையில் டெல்லியில் நேற்று நடந்தது.

புதுடெல்லி, 

இந்திய அமெச்சூர் கபடி சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் முன்னாள் நீதிபதி எஸ்.பி.கர்க் மேற்பார்வையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் சம்மேளனத்தின் தலைவராக கசானி ஞானேஸ்வரர் முடிராஜூம், துணைத்தலைவர்களாக தினேஷ் பட்டீல், ஜெகதீஷ்வர் யாதவ் ஆகியோரும், பொதுச் செயலாளராக தேஜஸ்வி சிங்கும், பொருளாளராக நிரஞ்சன் சிங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 4 இணைச்செயலாளர்களில் ஒருவராக தமிழகத்தை சேர்ந்த ஏ.சபியுல்லா மீண்டும் தேர்வானார். இவர், தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்க பொதுச் செயலாளராகவும் இருக்கிறார்.