பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thulikal

துளிகள்

துளிகள்
ஐ.-லீக் கால்பந்து தொடரில் ஸ்ரீநகரில் இன்று நடக்க இருந்த ரியல் காஷ்மீருக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட நடப்பு சாம்பியன் மினர்வா பஞ்சாப் அணி மறுத்தது.

* சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரஹானே தலைமையிலான அந்த அணியில், ஆஸ்திரேலிய பயணத்தின் போது கணுக்காலில் காயம் அடைந்த இளம் வீரர் பிரித்வி ஷா இடம் பெற்றுள்ளார்.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் நேற்றிரவு ஜாம்ஷெட்பூரில் நடந்த 78-வது லீக் ஆட்டத்தில் புனே சிட்டி அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை ஊதித்தள்ளி, 5-வது வெற்றியை சுவைத்தது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.- டெல்லி டைனமோஸ் அணிகள் சந்திக்கின்றன.

* ஐ.-லீக் கால்பந்து தொடரில் ஸ்ரீநகரில் இன்று நடக்க இருந்த ரியல் காஷ்மீருக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட நடப்பு சாம்பியன் மினர்வா பஞ்சாப் அணி மறுத்தது. தங்கள் அணியில் அங்கம் வகிக்கும் வெளிநாட்டு வீரர்கள், பயங்கரவாத தாக்குதல் காரணமாக காஷ்மீருக்கு செல்ல மறுப்பதாகவும், இந்த ஆட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் மினர்வா நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது. இதை ஏற்றுக்கொள்ள மறுத்த இந்திய கால்பந்து சங்கம் இந்த ஆட்டத்தில் மினர்வா அணி தோற்றதாக கணக்கிடப்படும் என்று கூறியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
* டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடும் வீரர்கள் சீருடையில் தங்களது பெயர் மற்றும் எண்களை பொறித்துக் கொள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து இந்த சலுகையை வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
2. துளிகள்
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
3. துளிகள்
ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா தங்கம் வென்றார்.
4. துளிகள்
முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையும், 15 வயதிலேயே ‘கிராண்ட்ஸ்லாம்’ மகுடம் சூடிய சாதனையாளருமான மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) தாய் ஆகியுள்ளார்.
5. துளிகள்
‘காபி வித் கரண்’ டி.வி. நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா பெண்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை கிளப்பின.

அதிகம் வாசிக்கப்பட்டவை