பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thulikal

துளிகள்

துளிகள்
சானியா மிர்சா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தேசத்தை பாதுகாக்கும் ராணுவத்தினரே உண்மையான ஹீரோக்கள். அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நான் இதயபூர்வமாக துணை நிற்கிறேன்.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் டெல்லியில் நேற்றிரவு அரங்கேறிய 79–வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் அணி 3–2 என்ற கோல் கணக்கில் ஏற்கனவே பிளே–ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்ட பெங்களூரு எப்.சி.யை சாய்த்து 3–வது வெற்றியை பெற்றது. இதில் ஒரு கட்டத்தில் டெல்லி அணி 1–2 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் டேனியல் லாலிம்புயா (77 மற்றும் 81–வது நிமிடம்) அடுத்தடுத்து அடித்த கோலால் வெற்றி பெற்றது. இன்றைய ஆட்டத்தில் எப்.சி. கோவா அணி, கேரளா பிளாஸ்டர்சை (இரவு 7.30 மணி) எதிர்கொள்கிறது.

*இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தேசத்தை பாதுகாக்கும் ராணுவத்தினரே உண்மையான ஹீரோக்கள். அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நான் இதயபூர்வமாக துணை நிற்கிறேன். ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட பிப்ரவரி 14–ந்தேதி இந்தியாவுக்கு ஒரு கருப்பு நாள். அது போன்ற தினத்தை மீண்டும் நாம் ஒரு போதும் பார்க்கமாட்டோம் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

*இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இவின் லீவிஸ், ரோவ்மன் பவெல் மற்றும் கீமோ பவெல் ஆகியோர் காயத்தால் அவதிப்படுவதால் அவர்களுக்கு பதிலாக கார்லஸ் பிராத்வெய்ட், ஷெல்டன் காட்ரெல், ஜான் கேம்ப்பெல் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து–வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி நாளை மறுதினம் நடக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
முறைகேடு எதிரொலியாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை அந்த நாட்டு விளையாட்டுத்துறை இடை நீக்கம் செய்துள்ளது.
2. துளிகள்
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ஜூன் 14–ந் தேதி தொடங்குகிறது.
3. துளிகள்
இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்ட போது கலீல் அகமது வீசிய பந்து வலது கையில் தாக்கி காயம் அடைந்தார்.
4. துளிகள்
* இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் பெடரேஷன், எச்.சி.எல். கம்ப்யூட்டர் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டின் தரத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன்படி இந்திய ஸ்குவாஷ் வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன.
5. துளிகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் அப்ரிடி தனது சுயசரிதை புத்தகத்தில் பல்வேறு சர்ச்சை கருத்துகளை தெரிவித்து இருந்தார்.