துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 19 Feb 2019 9:52 PM GMT (Updated: 19 Feb 2019 9:52 PM GMT)

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான போட்டிக்கும் ஹாமில்டன் மசகட்சா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.


* ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான போட்டிக்கும் ஹாமில்டன் மசகட்சா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். துணை கேப்டனாக பீட்டர் மூர் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* நியூசிலாந்து -வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டுனெடினில் இன்று நடக்கிறது. முதல் 2 ஆட்டங்களில் நியூசிலாந்து வெற்றி பெற்று இருந்தது.

* ஓமன் நாட்டில் நேற்று நடந்த உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆட்டம் ஒன்றில் ஸ்காட்லாந்துக்கு எதிராக களம் இறங்கிய ஓமன் அணி 17.1 ஓவர்களில் வெறும் 24 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 81-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்-புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.

* ‘இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை விட ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மாஸ்கஸ் ஸ்டோனிஸ் தான் தற்போது சிறந்த வீரர்’ என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.



Next Story