பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் மும்பை சிட்டி அணி 3-1 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ டி கொல்கத்தாவை வீழ்த்தியது.

* பிரிட்ஜ்டவுனில் நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 33 ஓவர் முடிந்திருந்த போது 3 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. கிறிஸ் கெய்ல் 50 ரன்களில் (63 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) போல்டு ஆனார்.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த 83-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 3-1 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ டி கொல்கத்தாவை வீழ்த்தியது. மும்பை வீரர் மோடோவ் சோகோவ் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார். 9-வது வெற்றியை சுவைத்த மும்பை அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. சென்னையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை சந்திக்கிறது. இந்த சீசனில் சென்னையில் நடக்கும் கடைசி ஆட்டம் இதுவாகும்.

ஆசிரியரின் தேர்வுகள்...