பிற விளையாட்டு

டேபிள் டென்னிஸ் லீக்: வாரியர்ஸ் அணி சாம்பியன் + "||" + Table Tennis League: Warriors Team Champion

டேபிள் டென்னிஸ் லீக்: வாரியர்ஸ் அணி சாம்பியன்

டேபிள் டென்னிஸ் லீக்: வாரியர்ஸ் அணி சாம்பியன்
டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில், வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை,

8 அணிகள் இடையிலான 2-வது டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் போட்டி சென்னை அண்ணா நகரில் 3 நாட்கள் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் மைட்டி வாரியர்ஸ் அணி 5-4 என்ற கணக்கில் லா பிளாக் தண்டர்சை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மைட்டி வாரியர்ஸ் அணியில் நிகில், யாஷினி, அபினந்த், கண்ணபிரான் உள்ளிட்டோர் வெற்றியை தேடித்தந்தனர். அந்த அணிக்கு சாம்பியன் கோப்பையுடன் ரூ.1 லட்சம் பரிசை, பிரபல டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் வழங்கினார்.