பிற விளையாட்டு

துளிகள் + "||" + Sports News in thuligal

துளிகள்

துளிகள்
‘இந்திய ‘ஏ’ அணிக்காக விளையாடிய போது அதன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நிறைய ஆலோசனைகள் வழங்கினார். அது மிகவும் உதவிகரமாக இருந்தது’ என்று தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுல், சர்ச்சைகள் தன்னை மேலும் பணிவான மனிதராக மாற்றியதாகவும் குறிப்பிட்டார்.
* 41-வது தேசிய சப்-ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி புவனேஸ்வரத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் பிரிவின் அரைஇறுதி ஆட்டத்தில் தமிழக அணி 22-25, 16-25, 26-24, 25-19, 10-15 என்ற செட் கணக்கில் அரியானாவிடம் தோல்வி அடைந்தது. இதையடுத்து நடந்த வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் தமிழக அணி 25-23, 20-25, 16-25, 16-25 என்ற செட் கணக்கில் ராஜஸ்தானிடம் தோல்வி கண்டு 4-வது இடத்தை பெற்றது.

* ‘உலக கோப்பை கிரிக்கெட்டில் பேட்டிங்கில் முன்வரிசையில் இறங்கினால் நன்றாக இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் சரியாக பயன்படுத்திக் கொள்வேன்’ என்று ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.

* ‘இந்திய ‘ஏ’ அணிக்காக விளையாடிய போது அதன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நிறைய ஆலோசனைகள் வழங்கினார். அது மிகவும் உதவிகரமாக இருந்தது’ என்று தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுல், சர்ச்சைகள் தன்னை மேலும் பணிவான மனிதராக மாற்றியதாகவும் குறிப்பிட்டார்.

* சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில், தமிழக அணி (பி பிரிவு) நேற்று விதர்பாவை சூரத்தில் எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த விதர்பா அணி 9 விக்கெட்டுக்கு 141 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. அபிஷேக் தன்வார் 3 விக்கெட்டுகளும், ஆர்.அஸ்வின் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். தொடர்ந்து ஆடிய தமிழக அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை சுவைத்தது. முரளிவிஜய் 74 ரன்களும் (4 பவுண்டரி, 4 சிக்சர்), ஜே.கவுசிக் 41 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா தங்கம் வென்றார்.
2. துளிகள்
முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையும், 15 வயதிலேயே ‘கிராண்ட்ஸ்லாம்’ மகுடம் சூடிய சாதனையாளருமான மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) தாய் ஆகியுள்ளார்.
3. துளிகள்
‘காபி வித் கரண்’ டி.வி. நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா பெண்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை கிளப்பின.
4. துளிகள்
இந்தியா–இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது.
5. துளிகள்
வங்காளதேச கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை