பிற விளையாட்டு

மக்ரான் கோப்பை குத்துசண்டை போட்டி : இந்தியா ஒரு தங்கம் உள்பட 8 பதக்கங்கள் வென்றது + "||" + Boxing: Eight medals assured for India in Makran Cup

மக்ரான் கோப்பை குத்துசண்டை போட்டி : இந்தியா ஒரு தங்கம் உள்பட 8 பதக்கங்கள் வென்றது

மக்ரான் கோப்பை குத்துசண்டை போட்டி : இந்தியா ஒரு தங்கம் உள்பட 8 பதக்கங்கள் வென்றது
மக்ரான் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்தியா ஒரு தங்கம் உட்பட 8 பதக்கங்களை வென்றது.
சாபகார்

ஈரானில் உள்ள சாபகார் நகரில்நடைபெற்ற மக்ரான் கோப்பை குத்துசண்டை போட்டியில் ஆண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் தீபக் சிங், ஜாபர் நஸ்ரியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

அதேவேளையில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லலிதா பிரசாத், 60 கிலோ எடைப் பிரிவில் மணீஷ் கவுசிக், 69 கிலோ எடைப் பிரிவில் துர்யோதன் சிங் நெகி, 91 கிலோ எடைப் பிரிவில் சஞ்ஜித், 91 கிலோவுக்கும் கூடுதலான எடைப் பிரிவில் சதீஷ் குமார் ஆகியோர் தங்களது இறுதி சுற்றுகளில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றனர்.

64 கிலோ எடைப் பிரிவு அரை இறுதியில் தோல்வியடைந்த இந்தியாவின் ரோஹித் தோகாஸ், 75 கிலோ எடைப் பிரிவு அரை இறுதியில் தோல்வியடைந்த இந்தியாவின் மன்ஜித் சிங் ஆகியோர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர்.