பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
முழங்கை காயத்துக்கு ஆபரேஷன் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் மீண்டும் பயிற்சியை தொடங்கியுள்ளார்.

* தாயகம் திரும்பிய விமானி அபிநந்தனுக்கு ஒரு சல்யூட், அவர் தான் உண்மையான ஹீரோ என்று கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி, ஷேவாக், கம்பீர் மற்றும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்டோர் புகழாரம் சூட்டியுள்ளனர். அவரது துணிச்சலும், கண்ணியமும் இளம் தலைமுறையினருக்கு உந்துசக்தியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

* 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் கொச்சியில் நேற்று நடந்த கேரளா பிளாஸ்டர்ஸ்- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் இடையிலான ஆட்டம் கோல் இன்றி (0-0) டிரா ஆனது. 23-வது நிமிடத்தில் எதிரணி வீரரை காலால் இடறி விட்ட கவுகாத்தி வீரர் குர்விந்தர்சிங் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். ஆனாலும் எஞ்சிய நேரம் கவுகாத்தி அணி 10 வீரர்களுடன் சமாளித்துக் கொண்டது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தை உறுதி செய்த கவுகாத்தி அணி அரைஇறுதியில் பெங்களூரு எப்.சி.யை சந்திக்க உள்ளது. இன்றைய லீக் ஆட்டத்தில் புனே சிட்டி-மும்பை சிட்டி அணிகள் (இரவு 7.30 மணி) மோதுகின்றன.

* முழங்கை காயத்துக்கு ஆபரேஷன் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் மீண்டும் பயிற்சியை தொடங்கியுள்ளார். அவருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தடை வருகிற 28-ந்தேதியுடன் முடிவுக்கு வருவதால், ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பிற்பகுதியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* ‘ரிஷாப் பான்டுக்கு இந்திய கிரிக்கெட்டில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. ஆனால் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு அவர் தகுதியானவராக இருப்பாரா? என்பதை உறுதியாக சொல்ல முடியாது’ என்று இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

* பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சர்வதேச 20 ஓவர் கிாக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 3-வது இடத்தை நானும், அண்டை நாட்டு வீரரான விராட் கோலியும் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறியுள்ளார். கோலி 67 ஆட்டங்களில் 2,263 ரன்களும், சோயிப் மாலிக் 111 ஆட்டங்களில் 2,263 ரன்களும் எடுத்துள்ளனர்.