பிற விளையாட்டு

தேசிய ஹேண்ட்பால் போட்டி: ராணுவ அணி ‘சாம்பியன்’ + "||" + National Handball Tournament: Army Team 'Champion'

தேசிய ஹேண்ட்பால் போட்டி: ராணுவ அணி ‘சாம்பியன்’

தேசிய ஹேண்ட்பால் போட்டி: ராணுவ அணி ‘சாம்பியன்’
தேசிய ஹேண்ட்பால் போட்டியில், ராணுவ அணி சாம்பியன் பட்டம் வென்றது.
திருவண்ணாமலை,

32 அணிகள் இடையிலான 47-வது தேசிய சீனியர் ஆண்கள் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப்-ராணுவ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ராணுவ அணி 51-47 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றியது.


வெற்றி பெற்ற அணிக்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பரிசுகளை வழங்கினார்.