பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
தென்ஆப்பிரிக்கா முன்னணி சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

*கவுரவமிக்க ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி நாளை முதல் 10-ந்தேதி வரை பர்மிங்காமில் நடக்கிறது. இந்த போட்டிக்கு 17 வீரர், வீராங்கனைகளை அனுப்பியுள்ள இந்தோனேஷிய பேட்மிண்டன் சங்கம், 4 தங்கப்பதக்கத்தை வெல்வதை இலக்காக கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது. சாய்னா, பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட இந்தியர்களும் இந்த போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள்.

*தென்ஆப்பிரிக்கா முன்னணி சுழற்பந்து வீச்சாளர் 39 வயதான இம்ரான் தாஹிர், மே 30-ந்தேதி தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2020-ம் ஆண்டு வரை தொடர்ந்து 20 ஓவர் போட்டியில் ஆட விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

*நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் முழுமையான போட்டி அட்டவணை வெளியிடப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி கூறியுள்ளார்.

*பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் லாகூர் கியூலாண்டர்ஸ் அணிக்காக ஆடி வந்த தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் முதுகுவலி காரணமாக கடைசி கட்ட போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.