பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thulikal

துளிகள்

துளிகள்
‘காபி வித் கரண்’ டி.வி. நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா பெண்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை கிளப்பின.

*நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று முன்தினம் தொடங்க இருந்தது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் நடக்கவில்லை. 2–வது நாளிலும் மழை புகுந்து விளையாடியதால் ஒரு பந்து கூட வீசப்படவில்லை.

*‘காபி வித் கரண்’ டி.வி. நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா பெண்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை கிளப்பின. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உங்களுக்கு விருப்பமா? என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வினிடம் ரசிகர் எழுப்பிய கேள்விக்கு, ‘நிச்சயமாக’ என்று பதில் அளித்துள்ளார்.

*ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தாய் ஜூ யிங் (சீனதைபே) 21–13, 10–21, 21–8 என்ற செட் கணக்கில் அகானே யமாகுச்சியை (ஜப்பான்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

*எம்.சி.சி. உலக கிரிக்கெட் கமிட்டி 100–க்கும் மேற்பட்ட நாடுகளில் 13 ஆயிரம் ரசிகர்களிடம் நடத்திய கருத்துகணிப்பில் 86 சதவீதம் பேர் குறுகிய வடிவிலான போட்டிகளை விட டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கே முன்னுரிமை அளிப்பது தெரியவந்துள்ளது.

* 5–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் எப்.சி.கோவா–மும்பை சிட்டி அணிகள் இடையிலான அரைஇறுதியின் முதலாவது சுற்று மும்பையில் நேற்றிரவு நடந்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய எப்.சி.கோவா அணி 5–1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை பந்தாடி இறுதிப்போட்டி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. இவ்விரு அணிகளும் அரைஇறுதியின் 2–வது சுற்றில் நாளை மறுதினம் மீண்டும் சந்திக்கிறது. இதில் குறைந்தது 5 கோல் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டி குறித்து நினைத்து பார்க்க முடியும்.


தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
* டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடும் வீரர்கள் சீருடையில் தங்களது பெயர் மற்றும் எண்களை பொறித்துக் கொள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து இந்த சலுகையை வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
2. துளிகள்
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
3. துளிகள்
ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா தங்கம் வென்றார்.
4. துளிகள்
முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையும், 15 வயதிலேயே ‘கிராண்ட்ஸ்லாம்’ மகுடம் சூடிய சாதனையாளருமான மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) தாய் ஆகியுள்ளார்.
5. துளிகள்
இந்தியா–இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை