துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 10 March 2019 9:30 PM GMT (Updated: 10 March 2019 7:10 PM GMT)

முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையும், 15 வயதிலேயே ‘கிராண்ட்ஸ்லாம்’ மகுடம் சூடிய சாதனையாளருமான மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) தாய் ஆகியுள்ளார்.

* முழங்கை காயத்தில் இருந்து குணமடைந்து உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆடிய ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் சதம் அடித்தார். சிட்னியை சேர்ந்த ரான்ட்விக்–பீட்டர்ஷாம் அணிக்காக களம் இறங்கிய அவர் 77 பந்துகளில் 7 சிக்சர், 4 பவுண்டரியுடன் 110 ரன்கள் எடுத்தார். பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் அவருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தடை காலம் வருகிற 28–ந்தேதியுடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.

* முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையும், 15 வயதிலேயே ‘கிராண்ட்ஸ்லாம்’ மகுடம் சூடிய சாதனையாளருமான மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) தாய் ஆகியுள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு சில தினங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு லியா என்று பெயர் சூட்டியுள்ளார். தனது கணவர் டாக்டர் ஹரால்டு லீமான், குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஹிங்கிஸ் வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

*5–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில், பெங்களூரு எப்.சி.– நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2–வது சுற்று பெங்களூருவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. முதலாவது சுற்றில் பெங்களூரு எப்.சி. கடைசி நிமிடத்தில் செய்த தவறால் 1–2 என்ற கோல் கணக்கில் யுனைடெட் அணியிடம் தோல்வி அடைந்தது. எனவே இன்றைய ஆட்டத்தில் குறைந்தது 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூரு அணியால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். அதே சமயம் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி ‘டிரா’ செய்தாலே இறுதிப்போட்டியை உறுதி செய்து விடலாம்.

*ஒலிம்பிக்கில் 5 தங்கப்பதக்கம் வென்றவரான ஜிம்னாஸ்டிக்ஸ் ஜாம்பவான் ருமேனியாவின் நாடியா கோமனெசி டெல்லியில் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம் வெல்வது மிகவும் சவாலானது. இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர், 2020–ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை பெற தன்னை தயார்படுத்திக் கொள்வதற்கு வெளிநாட்டுக்கு இடம் பெயர வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் உள்ள ஜிம்னாஸ்டிக்ஸ் முறைகளே நன்றாகத் தான் இருக்கிறது. சிறந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வசதி உள்ள வெளிநாடுகளுக்கு சென்று அவர் ஒன்றிரண்டு வாரங்கள் பயிற்சி செய்தால் போதும்’ என்றார்.

* 20 ஓவர் கிரிக்கெட்டில் பெண்களுக்கான தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 3 இடங்கள் உயர்ந்து 3–வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் அவருக்கு இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. காயத்தால் இங்கிலாந்து தொடரில் ஆடாத இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 2 இடங்கள் இறங்கி 9–வது இடத்தை பெற்றுள்ளார்.


Next Story