பிற விளையாட்டு

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் சீன வீராங்கனை சென் யூபே ‘சாம்பியன்’ தாய் ஜூ யிங்குக்கு அதிர்ச்சி அளித்தார் + "||" + All England Badminton Chen Yube's 'Champion' Mother Ji was shocked

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் சீன வீராங்கனை சென் யூபே ‘சாம்பியன்’ தாய் ஜூ யிங்குக்கு அதிர்ச்சி அளித்தார்

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் சீன வீராங்கனை சென் யூபே ‘சாம்பியன்’ தாய் ஜூ யிங்குக்கு அதிர்ச்சி அளித்தார்
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நடந்தது.

பர்மிங்காம், 

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான தாய் ஜூ யிங் (சீனதைபே), 4–ம் நிலை வீராங்கனை சென் யூபேவை (சீனா) எதிர்கொண்டார்.

அபாரமாக ஆடிய 21 வயதான சென் யூபே 21–17, 21–17 என்ற நேர் செட் கணக்கில் 41 நிமிடங்களில் தாய் ஜூ யிங்கை மிரள வைத்து, இந்த பட்டத்தை முதல்முறையாக தட்டிச் சென்றார். சென் யூபே, தாய் ஜூ யிங்கை தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு அவருக்கு எதிராக ஆடியிருந்த 11 ஆட்டங்களிலும் தோல்வி கண்டிருந்தார். வாகை சூடிய சென் யூபேவுக்கு ரூ.49 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.