பிற விளையாட்டு

ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார் + "||" + Asian Junior Athletic: Tamil Nadu woman player won the gold medal at long jump

ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்

ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்
ஆசிய இளையோர் தடகள போட்டியின், நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்.
ஹாங்காங்,

3-வது ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹாங்காங்கில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை தபிதா 5.86 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த தபிதா வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். அவர் முதல் நாளில் நடந்த 100 மீட்டர் தடை ஓட்டத்திலும் தங்கம் வென்று இருந்தார். சீன வீராங்கனை ஷிஹூய் 5.76 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கமும், மற்றொரு இந்திய வீராங்கனை அம்பிகா 5.73 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப்பதக்கமும் பெற்றனர். தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய தபிதா சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் மத்திய கலால் வரி சூப்பிரண்டும், பயிற்சியாளருமான பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.தொடர்புடைய செய்திகள்

1. மாநில ஜூனியர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தபிதா புதிய சாதனை
மாநில ஜூனியர் தடகள போட்டியின் நீளம் தாண்டுதலில் தபிதா புதிய சாதனை படைத்தார்.