பிற விளையாட்டு

இந்திய நடைப்பந்தய வீரர் இர்பான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி + "||" + Indian walker Irfan is eligible for the Olympic Games

இந்திய நடைப்பந்தய வீரர் இர்பான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

இந்திய நடைப்பந்தய வீரர் இர்பான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
இந்திய நடைப்பந்தய வீரர் இர்பான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றார்.
நோமி,

14-வது ஆசிய நடைபந்தய சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் நோமி நகரில் நேற்று நடந்தது. இதில் 20 கிலோமீட்டர் பந்தய தூரத்தை ஜப்பான் வீரர் தோஷிகாஜூ யமானிஷி 1 மணி 17 நிமிடம் 15 வினாடிகளில் முதலில் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் கே.டி.இர்பான் இலக்கை 1 மணி 20 நிமிடம் 57 வினாடிகளில் எட்டி 4-வது இடத்தை பிடித்தார். பதக்கம் வெல்ல தவறினாலும் அடுத்த ஆண்டு (2020) டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். கேரளாவைச் சேர்ந்த தேசிய சாதனையாளரான 29 வயதான கே.டி.இர்பான், தடகளத்தில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் ஆவார். ஒலிம்பிக் நடைப்பந்தயத்திற்கு தகுதி இலக்கு நேரமாக 1 மணி 21 நிமிடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மே 31-ந்தேதி வரை தகுதி பெறுவதற்கான காலஅவகாசம் ஆகும்.


இதே ஆசிய போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் தேவிந்தர் சிங் (1 மணி 21 நிமிடம் 22 வினாடி), கணபதி கிருஷ்ணன் (1 மணி 22 நிமிடம் 12) ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும் உலக நடைபந்தய சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை சவும்யா பேபி 1 மணி 36 நிமிடம் 08 வினாடிகளில் இலக்கை அடைந்து 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டு ஏமாற்றம் அளித்தார்.