துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 20 March 2019 9:45 PM GMT (Updated: 20 March 2019 9:20 PM GMT)

சமீபத்தில் நடந்த ஐ லீக் கால்பந்து போட்டியில் சென்னை சிட்டி எப்.சி. அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது


* மாநில அளவிலான டென்னிஸ் போட்டி சென்னையை அடுத்த பொன்னேரியில் நடந்தது. இதில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பிரிவில் சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவி ரவிலாகுமார் கிரித்தி முதலிடத்தை பிடித்தார். அவருக்கு கோப்பையுடன் ரூ.8 ஆயிரம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

* சமீபத்தில் நடந்த ஐ லீக் கால்பந்து போட்டியில் சென்னை சிட்டி எப்.சி. அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சிட்டி எப்.சி. அணிக்கு சர்வதேச கால்பந்து சங்க தலைவர் ஜியானி இன்பான்டினோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

* கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்டி தோள்பட்டை காயம் காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார். இதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கம் வகித்த மற்றொரு தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் 22 வயதான நிகிடி இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீளாததால் அவரும் இந்த ஐ.பி.எல். சீசனில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* “விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த வீரர். சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் கடினமாக உழைக்கிறார். அவரது பேட்டிங்கை மக்கள் ரசித்து பார்க்கிறார்கள். எதையும் எளிதாக எடுத்துக் கொள்வது அவரது தனிச்சிறப்பாகும். தெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா? என்பதற்கு அவர் தான் பதில் சொல்ல முடியும்’ என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பயிற்சியாளர் காலிஸ் கூறினார்.



Next Story