பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thulikal

துளிகள்

துளிகள்
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் ஆட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தளர்த்திக்கொள்வதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.

* உலகின் 2–ம் நிலை டென்னிஸ் வீராங்கனையும், முன்னாள் விம்பிள்டன் சாம்பியனுமான பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) 2016–ம் ஆண்டு தனது வீட்டில் மர்மநபரால் இடது கையில் கத்தியால் குத்தப்பட்டார். இதனால் அவர் 6 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டி இருந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரடிம் ஜோன்ட்ரா (வயது 33) என்பவருக்கு அந்த நாட்டு கோர்ட்டு நேற்று 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

*இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் ஆட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தளர்த்திக்கொள்வதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இதனால் மலிங்கா ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இனி வரும் ஆட்டங்களில் விளையாட முடியும்.

* ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி 2020–ம் ஆண்டு நடக்கிறது. தற்போது இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த ஒரு ஆட்டத்தில் உலக கோப்பை போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய அணியான குரோஷியா 1–2 என்ற கோல் கணக்கில் (இ பிரிவு) ஹங்கேரி அணியிடம் தோல்வி அடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5–1 என்ற கோல் கணக்கில் மோன்ட்னெக்ரோவை (ஏ பிரிவு) நொறுக்கியது.