ஆசிய துப்பாக்கி சுடுதலில் மானுபாகெர்–சவுரப் சவுத்ரி ஜோடி உலக சாதனையுடன் தங்கம் வென்றது


ஆசிய துப்பாக்கி சுடுதலில் மானுபாகெர்–சவுரப் சவுத்ரி ஜோடி உலக சாதனையுடன் தங்கம் வென்றது
x
தினத்தந்தி 27 March 2019 10:00 PM GMT (Updated: 27 March 2019 7:26 PM GMT)

12–வது ஆசிய துப்பாக்கி சுடுதல் (ஏர்கன்) சாம்பியன்ஷிப் போட்டி சீன தைபேயில் நடந்து வருகிறது.

புதுடெல்லி, 

12–வது ஆசிய துப்பாக்கி சுடுதல் (ஏர்கன்) சாம்பியன்ஷிப் போட்டி சீன தைபேயில் நடந்து வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் மானுபாகெர்–சவுரப் சவுத்ரி ஜோடி 484.8 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. தென்கொரியாவின் ஹவாங் சியோன்குன்–கிம் மோஸ் ஜோடி 481.1 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், சீன தைபேயின் வு ஷியா யிங்–கு குயான் டிங் இணை 413.3 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர். மற்றொரு இந்திய ஜோடியான அனுராதா–அபிஷேக் வர்மா 372.1 புள்ளிகளுடன் 4–வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த போட்டியின் தகுதி சுற்றில் 17 வயதான மானு பாகெர், 16 வயதான சவுரப் சவுத்ரி ஜோடி 784 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது. இந்த வகையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நடந்த ஐரோப்பிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ரஷியாவின் விடாலினா பாட்சாராஷ்கினா–அர்டெம் செர்னோசோவ் ஜோடி 782 புள்ளிகள் சேர்த்ததே உலக சாதனையாக இருந்தது.


Next Story