பிற விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் ஸ்ரீகாந்த் தோல்வி + "||" + Indian Open Badminton: Srikanth failed in the final

இந்திய ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் ஸ்ரீகாந்த் தோல்வி

இந்திய ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் ஸ்ரீகாந்த் தோல்வி
இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்தது.

புதுடெல்லி,

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்தியாவின் ஸ்ரீகாந்த், முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர் விக்டர் ஆக்சல்சென்னை (டென்மார்க்) சந்தித்தார். விறுவிறுப்பான இந்த மோதலில் ஸ்ரீகாந்த் 7–21, 20–22 என்ற நேர் செட் கணக்கில் தோற்று ஏமாற்றத்திற்கு உள்ளானார். 36 நிமிடங்கள் மட்டுமே இந்த ஆட்டம் நடந்தது. 2017–ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபனுக்கு பிறகு ஸ்ரீகாந்த் எந்த பட்டமும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் ஒற்றையர் இறுதிசுற்றில் தாய்லாந்தின் ராட்சனோக் இன்டானோன் 21–15, 21–14 என்ற நேர் செட்டில் ஹீ பிங்ஜாவை (சீனா) தோற்கடித்து மகுடம் சூடினார்.