பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் கோ-கோ விளையாட்டிலும் தொழில்முறை லீக் போட்டி நடத்த இந்திய கோ- கோ சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

* இந்திய பேட்மிண்டன் அணியின் தலைமை பயிற்சியாளர் கோபிசந்த் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய விளையாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் வயது மோசடியை தடுத்து நிறுத்த நிலையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வீரர்கள் வயது மோசடியில் ஈடுபட்டது போதிய ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்’ என்று வற்புறுத்தி இருக்கிறார்.

* ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் கோ-கோ விளையாட்டிலும் தொழில்முறை லீக் போட்டி நடத்த இந்திய கோ-கோ சம்மேளனம் முடிவு செய்துள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி 21 நாட்கள் நடத்தப்படுகிறது. இந்தியாவை தவிர இங்கிலாந்து, தென்கொரியா, ஈரான், வங்காளதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகளும் இந்த போட்டியில் இடம் பெறுகிறார்கள். இந்த போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.

* பாகிஸ்தான் அரசின் தகவல் துறை மந்திரி பவாத் சவுத்ரி இஸ்லாமாபாத்தில் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் ஒளிபரப்பு செய்வதற்கு தடை விதித்து பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நடந்த பாகிஸ்தான் மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதற்கு தீங்கு ஏற்படுத்தும் முயற்சியில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு இருக்கிறது. அப்படி இருக்கையில் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டியான ஐ.பி.எல்.லை பாகிஸ்தானில் வளர்ப்பதற்கு ஒளிபரப்பு அனுமதி அளிப்பது சரியானதாக இருக்காது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது’ என்று தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணி தனது கடைசி 5 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-ஐதராபாத் அணிகள் மீண்டும் மோதல்: சேப்பாக்கத்தில் இன்று நடக்கிறது
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்: பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை தோற்கடித்து 5-வது வெற்றியை தனதாக்கியது. #IPL2019 #MIvRCB
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு
பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.