பிற விளையாட்டு

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு முன்னேற்றம் சிந்து அதிர்ச்சி தோல்வி + "||" + Malaysian Open Badminton Srikanth Progress to Semi finals Sindhu shock failure

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு முன்னேற்றம் சிந்து அதிர்ச்சி தோல்வி

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு முன்னேற்றம் சிந்து அதிர்ச்சி தோல்வி
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
கோலாலம்பூர்,

இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 10-ம் நிலை வீராங்கனையான சுங் ஜி ஹியூனை (தென்கொரியா) எதிர்கொண்டார். 42 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 18-21, 7-21 என்ற நேர்செட்டில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-11, 21-15 என்ற நேர்செட்டில் தாய்லாந்து வீரர் கோசித் பெட்பிரதாப்பை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற ஸ்ரீகாந்துக்கு 32 நிமிடமே தேவைப்பட்டது.