பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
மோன்டெர்ரி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடந்து வருகிறது.

* மோன்டெர்ரி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த அரைஇறுதியில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்கா 6-4, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) வீழ்த்தி இறுதிப்போட்டியை எட்டினார். டபிள்யூ.டி.ஏ. தொடர் ஒன்றில் அஸரென்கா இறுதி சுற்றுக்கு முன்னேறுவது 2016-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

* புரோ கபடி போட்டிக்கான புனேரி பால்டன் அணிக்கு இந்திய முன்னாள் கேப்டன் அனுப்குமாரும், அரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு முன்னாள் வீரர் ராகேஷ் குமாரும் தலைமை பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

* தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் எல்ரிசா தெனிசென்-போரி நேற்று முன்தினம் ஸ்டில்போன்டீன் நகரில் நடந்த சாலை விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார். 25 வயதான தெனிசென் தென்ஆப்பிரிக்க அணிக்காக 3 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார்.